சட்ட கருத்தரங்கு
மதுரை: மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் நடைமுறைச் சட்டத்தின் சவால்கள் மற்றும் பரிணாமத்தை மதிப்பிடுதல் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.முதல்வர் குமரன் வரவேற்றார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது: நடைமுறை (சிவில், குற்றவியல்) சட்டங்களை மாணவர்கள் நன்றாக கற்க வேண்டும். சேவையுடன் பணமும் சம்பாதிக்க வேண்டும். ஒழுக்கத்துடன் நல்ல முறையில் வழக்கறிஞர் தொழில் செய்து முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.