உள்ளூர் செய்திகள்

விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு பதிவு செய்ய நவ., 10 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு பதிவு செய்ய, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது. இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 6ம் தேதி முதல், 10ம் தேதி வரை பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பத்தை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மாவட்ட கல்வி அலுவலகங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நவ., 10ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் ரூ.125 கட்டணமாக செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் தேர்வர்கள், தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் சேவை மையத்திற்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ததற்கான ஒப்புகைச் சீட்டு சமர்ப்பித்து பொதுத் தேர்விற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் வழங்கப்படும் ஏப்ரல்-2024க்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக் கொண்டே தேர்வர்கள் செய்முறைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்