புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள வேளாண் பல்கலையும் ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளுக்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, முதுநிலை மாணவர்களின் நீண்டகால ஆராய்ச்சிகளில் கவனம் கொள்ளவுள்ளது. குறிப்பாக, காரீப் பருவ கம்பு, பச்சைபயறு, ஆமணக்கு, எள், மசாலா பயிர்களான சீரகம், வெந்தயம் மற்றும் சென்னா, போன்ற பயிர்களில் கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாணவர்கள் பரிமாற்றம், கலப்பு கற்றல் வாயிலாக பாடங்கள் உள்ளடக்க பகிர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஜோத்பூர் வேளாண் பல்கலை துணைவேந்தர் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கோப்புகளை பரிமாறிக்கொண்டனர். முதுநிலை பிரிவு டீன் செந்தில், ஆராய்ச்சி இயக்குனர் சீதாராம், விரிவாக்க கல்வி இயக்குனர் ஈஸ்வர்சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.