உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிப்பது, பயிற்சியை அந்தந்த ஒன்றியங்களில் பி.ஆர்.சி., மையங்களில் அல்லது அரசு பள்ளிகளிலே நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட துணை தலைவர் சோணைமுத்து தலைமை வகித்தார். வட்ட செயலாளர் மகாராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வைரமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம், இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் பேசினர். வட்ட செயலாளர்கள் தங்கராஜ், ஜெகன்நாதன், ராம்தாஸ், சத்தியசீலன் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் செல்வகணேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்