மாணவருக்கு பாராட்டு
விருதுநகர்: மதுரை காமராஜர் பல்கலை சார்பாக தமிழ் பண்பாட்டு மரபுக் கலை திருவிழாவில் தமிழ் மரபுக் கலையை பாதுகாக்கும் முயற்சியில் பங்காற்றியதற்காக விருதுநகர் கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மாணவர் சிலம்ப கலைஞர் யாத்ரா விதுனுக்கு பண்பாட்டு கலைச்சுடர் 2023 என்ற பன்னாட்டு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவரை கே.வி.எஸ்., மானேஜிங் போர்டின் தலைவர் கார்த்திகேயன், பள்ளி செயலாளர் முரளிதரன், பொருளாளர் ரத்தினவேல் பாராட்டினர்.