உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு விருது

விழுப்புரம்: விழுப்புரத்தில் உலக ரெட்கிராஸ் தினத்தையொட்டி ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர்களுக்கு நெடுங்கால சேவை விருது வழங்கப்பட்டது.விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பை பள்ளிகளில் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு நெடுங்கால சேவை விருது வழங்கப்பட்டது.முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் விருதுகளை வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.விழாவில், அரசு பள்ளி ஆசிரியர்களான ஏழுமலை, ராமமூர்த்தி, சிவக்குமார், பத்மநாபன், ராஜவேல், பாண்டிச்செல்வம், குமார், உஷா ஆகியோருக்கும், அதிக மாணவர்களுடன் ஜே.ஆர்.சி., அமைப்பை நடத்தி வரும் அரசமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, செம்மார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை, பொருளாளர் எட்வர்ட் தங்கராஜ், இணை கன்வீனர்கள் ரவீந்திரன், தமிழழகன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்