கல்விக்கடன் மேளா
மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடப்பு ஆண்டில் கல்விக் கடன் மேளா நடத்துவது தொடர்பாக கடந்த வாரம் உயர்நிலைக் குழுக்கூட்டம் நடந்தது.இதையடுத்து ஆயத்தக் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், ஆர்.டி.ஓ., ஷாலினி, தாசில்தார்கள், வங்கி பிரதிநிதிகள், கல்லுாரி பிரதிநிதிகள், மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.மாணவர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் கடன் வழங்குவது, கல்விக் கடன் வழங்குவதில் முன்னோடி மாவட்டமாக திகழ ஒத்துழைப்பது என ஆலோசனை தெரிவித்தனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.