மருத்துவ படிப்புகள்
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ், கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் இயங்கும் 'ஸ்ரீ சித்ரா திருநாள் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்சஸ் அண்டு டெக்னாலஜி'யில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.படிப்பு நிலைகள்: * சான்றிதழ், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா, ஸ்பெஷாலிட்டி நர்சிங் டிப்ளமா, அட்வான்ஸ்டு சர்ட்டிபிகேட் படிப்புகள்* பிஎச்.டி., - முழுநேரம் மற்றும் பகுதிநேரம்* போஸ்ட் டாக்டோரல் சர்ட்டிபிகேட் படிப்புகள்* போஸ்ட் டாக்டோரல் பெலோஷிப் - பி.டி.எப்.,சேர்க்கை முறை: கல்வி நிறுவனத்தில் நடைபெறும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பிக்கும் முறை: https://www.sctimst.ac.in/Academic-Online-Application/ எனும் இணையபக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: பி.டி.எப்., படிப்புகள் - நவம்பர் 15 இதர படிப்புகள் - செப்டம்பர் 30விபரங்களுக்கு: www.sctimst.ac.in