உள்ளூர் செய்திகள்

கிராமங்களும் டிஜிட்டல்மயம்!

எழுத்தறிவு பெற்றவர்கள் குறைவாக வசிக்கும் பகுதி கிராமங்கள் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்ததுண்டு. ஆனால், இன்று, கல்வி, தகவல் தொழில்நுட்பம் என, நகர நாகரிகத்துக்கு இணையான வளர்ச்சியை கிராமங்களும் பெற துவங்கியிருக்கின்றன.கிராமங்களிலும் கல்வியறிவு பெருகிவிட்ட நிலையில், ஊராட்சி நிர்வாக பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, உரிமம் வரி என, பல வரி இனங்களை ஊராட்சி நிர்வாகங்கள் வசூலிக்கின்றன. வரி இனங்களின் வகைக்கு ஏற்ப இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் என வெவ்வேறு நிறங்களில் ரசீதுகள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், அனைத்து ஊராட்சிகளிலும், 2023 -24ம் நிதியாண்டு முதல், வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் 'ஆன்லைன்' வாயிலாகவே வசூலிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்துவதில் ஊராட்சி நிர்வாகங்கள் வேகம் காட்டி வருகின்றன. கிராம ஊராட்சிகளின் பயணத்தில், இதுவும் ஒரு சாதனை மைல் கல் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்