உள்ளூர் செய்திகள்

ஸ்லோவேனியா உதவித்தொகை

இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஸ்லோவேனியா அரசு உதவித்தொகை வழங்குகிறது. ஸ்லோவேனிய நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், குறுகிய கால பயிற்சி பெற விரும்புவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.படிப்புகள்: முதுநிலை அல்லது ஆராய்ச்சி படிப்பின் ஒரு பகுதியாக, ஸ்லோவேனிய கல்வி நிறுவனத்திற்கு குறுகிய கால 'விசிட்' மேற்கொள்ளலாம். உதவித்தொகை காலம்: 3 முதல் 10 மாதங்கள் வரை.வயது வரம்பு: உதவித்தொகை காலம் முடிவதற்குள் 26 வயது பூர்த்தியாகக்கூடாது. இந்த விதி ஆராய்ச்சி மாணவர்களுக்கு 30 வயதாக உள்ளது.சலுகைகள்: கல்வி பெறும் காலம்வரை மாதம் ரூ.38 ஆயிரம் உதவித்தொகை. இலவச தங்குமிடம். மருத்துவ காப்பீடு மற்றும் குறைந்த கட்டணத்தில் உணவு.மொத்த உதவித்தொகை எண்ணிக்கை: 24விண்ணப்பிக்கும் முறை: மாணவர் விருப்பப்படி, பல்கலைக்கழகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு தொடர்புடைய துறையிலிருந்து ஒரு ஏற்பு கடிதத்தைக் கோர வேண்டும். இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.குறிப்பு: முழுமையான படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்படாது. அதேபோல், ஸ்லோவேனிய மொழிப் பாடத்திற்கும் உதவித்தொகை வழங்கப்படாது.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30விபரங்களுக்கு: https://studyinslovenia.si/study/exchange-programmes/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்