உள்ளூர் செய்திகள்

தலைமையாசிரியர்கள் ஆலோசனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 அரசு பொதுத் தேர்வு 2026 குறித்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் குமார், முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி முன்னிலை வகித்தனர். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 அரசு பொதுத்தேர்வு விதிமுறைகள் குறித்து மாணவர்களிடம் தெளிவாக ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் , நேர்முக உதவியாளர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்