முப்பெரும் விழா
திருப்பத்தூர்: பூலாங்குறிச்சி வ.செ.சிவ., அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.முதல்வர் ஆனந்தி தலைமை வகித்தார். வேதியியல் துறைத் தலைவர் ரமாதேவி வரவேற்றார். சென்னை ஏ.வி.எம்., ஆய்வக மேலாண்மை இயக்குனர் மெய்யப்பன் சிறப்புரையாற்றினார்.மாவட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்க தலைவர் சுந்தரராமன் வாழ்த்தினார். அண்ணாமலை பல்கலை உடற்கல்வி இயக்குனர் முத்து சுப்பிரமணியன் விளையாட்டு போட்டிகளில் வென்ற பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் வடிவேல் நன்றி கூறினார்.