சர்வதேச கருத்தரங்கு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் கணினி அறிவியல், பொறியியல் துறை சார்பில் கணினி இயந்திரவியல் சோதனை, பொறியியல் மதிப்பீடு என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.இணை வேந்தர் டாக்டர் அறிவழகி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசி ஆனந்த் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ராஜா சுப்பிரமணியன் வரவேற்றார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்துரையாற்றினார்.இந்தோனேசியா பல்கலைக்கழக பேராசிரியர் முகமது அலி பௌஸி மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார். பல்வேறு நாடுகளை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்று பேசினர்.கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.