உள்ளூர் செய்திகள்

ஆதித்யா எல்1: புவி வட்டப் பாதையில் துவக்கியது பயணம்

சென்னை: சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலத்தை பி.எஸ்.எல்.வி.,  சி 57 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ நேற்று புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1 என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்யும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான துாரம் 15 கோடி கிலோ மீட்டர். இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு போன்றவற்றுக்கு பயன்படும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.ஆய்வுநிலவை பற்றி ஆய்வு செய்ய ஜூலை 14ல் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கருவி கடந்த மாதம் 23ம் தேதி மாலை, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு, லேண்டர் மற்றும் அதில் இருந்து வெளியே வந்த ரோவர் கருவி ஆகியவை நிலவில் உள்ள கனிமவளங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.இதையடுத்து, முதல் முறையாக சூரியன் தொடர்பான தகவல்களை விரிவாக ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏழு அதிநவீன ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ள விண்கலத்தின் மொத்த எடை, 1,480.70 கிலோ. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி 57 ராக்கெட், ஆதித்யா எல்1 விண்கலத்தை சுமந்தபடி, நேற்று பகல் 11:50 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.பூமியில் இருந்து புறப்பட்ட, ஒரு மணி நேரம், மூன்றாவது நிமிடத்தில் ராக்கெட் திட்டமிட்டபடி, குறைந்தது 235 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 19,500 கி.மீ., துாரம் உள்ள புவி வட்டப் பாதையில், ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அங்கிருந்து ராக்கெட்டில் இருந்து பிரிந்த எல்.ஏ.எம்., அதாவது லிக்யூடு அபோஜி மோட்டார் உதவியுடன் ஆதித்யா எல்1 விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., துாரம் உள்ள லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 என்ற புள்ளியில் நிறுத்தப்படும்.15 கோடி கி.மீ.,அதன்படி, வரும் ஜனவரியில் விண்கலம், எல்1 புள்ளியை சென்றடையும். லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 புள்ளியில் தான், சூரியன் மற்றும் பூமி ஆகிய கோள்களின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் உள்ளன. பூமியில் இருந்து, 15 கோடி கி.மீ., தொலைவில் உள்ளது சூரியன். பூமியில் இருந்து சூரியனுக்கான துாரத்தில், 1 சதவீதம் என்ற அளவில் உள்ள எல்1 புள்ளியில், சூரியனுக்கு நேர் எதிர் திசையில் இது நிறுத்தப்படும்.ஐந்து ஆண்டுகள்ஆதித்யா விண்கலத்தில், ஏழு அதிநவீன ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆதித்யா விண்கலம், லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 புள்ளியில் இருந்தபடி, சூரியனின் வெளிப்புற அடுக்குகள், சூரியனின் வெளிப்பகுதி வெப்ப சூழல், வளி மண்டலம் மற்றும் வெப்ப நிலையின் இயக்கவியல், ஒளிவட்டம், கதிர்வீச்சு. காந்த புலம், சூரிய காற்றின் இயக்கம் மற்றும் தன்மை, சூரியனின் எக்ஸ்ரே கதிர், விண்வெளியில் சூரிய இயக்கவியல், விண்வெளி காலநிலை போன்றவற்றை ஆய்வு செய்யும்.ஐந்து ஆண்டுகள் பயன்படும் வகையில், ஆதித்யா எல்1 விண்கலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு, வாழ்த்துகளை தெரிவித்தார்.ஏழு கருவிகள் என்னென்ன?ஆதித்யா எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள விசிபல் எமிசன் லைன் கொரோனாகிராப் என்ற கருவியானது, சூரியனின் ஒளி மற்றும் நிற மண்டலங்கள், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளிவட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்யும். சோலார் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப் கருவி சூரிய ஒளி கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்கள் எப்படி மாறுபடுகின்றன என்பதை புகைப்படம் எடுக்கும்.சோலார் லோ எனர்ஜி எக்ஸ் - ரே ஸ்ப்கெட்ரோ மீட்டர் மற்றும் ஹை எனர்ஜி எல்1 ஆகிய இரு கருவிகள் சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் வெப்பம் குறித்து ஆய்வு செய்யும். ஆதித்யா சேலார் விண்ட் பார்டிகல் எக்ஸ்பிரிமென்ட் மற்றும் பிளாஸ்மா அனலைசர் ஆகிய இரு கருவிகளும் சூரிய காற்றின் தன்மைகள் ஆற்றல் தொடர்பாக ஆய்வு செய்யும். மேக்னடோமீட்டர் எனும் கருவி, சூரியன் மற்றும் அதை சுற்றியுள்ள கிரகங்களில் இருந்து வெளியேறக் கூடிய காந்த விசையை ஆய்வு செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்