பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணைத் தேர்வுகள் 2026: கால அட்டவணை வெளியீடு!
சென்னை: தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம், 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 நிலுவை பாடங்கள் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 துணைத் தேர்வு அட்டவணைபிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஜூலை 7ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. ஜூன் 29: பகுதி - 1 தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள். ஜூன் 30: பகுதி - 2 ஆங்கிலப் பாடம். ஜூலை 01: கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல் மற்றும் செவிலியர் (பொது). ஜூலை 02: தொடர்பியல் ஆங்கிலம், அறநெறி மற்றும் இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி - வேதியியல், அட்வான்ஸ்டுத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியர் (தொழிற்கல்வி) மற்றும் அடிப்படை மின் பொறியியல். ஜூலை 03: வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல். ஜூலை 06: உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திரப் பொறியியல், ஜவுளித் தொழில்நுட்பம் மற்றும் அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப். ஜூலை 07: இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்.பிளஸ் 1 நிலுவை பாடங்களுக்கான தேர்வுபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 8ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.ஜூலை 08: பகுதி - 1 தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்.ஜூலை 09: பகுதி - 2 ஆங்கிலப் பாடம்.ஜூலை 10: உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திரப் பொறியியல், ஜவுளித் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப். ஜூலை 13: இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்.ஜூலை 14: தொடர்பியல் ஆங்கிலம், அறநெறி மற்றும் இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி - வேதியியல், அட்வான்ஸ்டுத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியர் (தொழிற்கல்வி) மற்றும் அடிப்படை மின் பொறியியல்.ஜூலை 15: வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல்.ஜூலை 16: கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல் மற்றும் செவிலியர் (பொது).இதனைத் தொடர்ந்து, அனைத்துத் தேர்வுகளும் காலை 10:00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 01:15 மணி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக, முதல் 10 நிமிடம் மாணவர்கள் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த ஐந்து நிமிடம் தேர்வர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படும். அதன் பிறகு காலை 10:15 மணி முதல் 01:15 மணி வரை, மூன்று மணி நேரம் தேர்வு எழுதுவதற்கான கால அவகாசம் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.