உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையினருக்கு 10 சிறப்பு கல்லுாரிகள் தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு

ஹைதராபாத்: “தெலுங்கானாவில், 10 மாவட்டங்களில், சிறுபான்மையினருக்காக தனித்துவமான சிறப்பு கல்லுாரிகள் நிறுவப்படும்,” என, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.தெலுங்கானாவில், சிறுபான்மையினர் நலன் குறித்து, காங்கிரசைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தெலுங்கானா அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:தெலுங்கானாவில், 10 மாவட்டங்களில், சிறுபான்மையினருக்காக தனித்துவமான சிறப்பு பட்டப்படிப்பு கல்லுாரிகள் அமைக்கப்படும்.இந்த கல்லுாரிகள் வெறும் பாரம்பரிய படிப்புகளை மட்டும் வழங்காமல், மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சிகளையும் வழங்கும்.பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., சமூகங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படுவதை போலவே, சிறுபான்மையின மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.குரூப் - 1, குரூப் - 2 மற்றும் குரூப் - 3 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சிறுபான்மையின இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறுபான்மையினர் நலத்துறையில் பொறுப்புகளை வழங்கி, துறை சார்ந்த திட்டங்களை பற்றி முழுமையாக புரிந்துகொள்ள வழிகாட்டப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்