உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்தக் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்தக் கூட்டம் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். டி.இ.ஓ.,க்கள் தொடக்க கல்வி பாலமுருகன், இடைநிலை பிரிவு ஜோதிமணி, தனியார் பள்ளிகள் விஷ்ணுமூர்த்தி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி ஆலோசனைகள் வழங்கினர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 11ம் தேதி துவங்கி ஏப்., 4ம் தேதி வரை நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 228 அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 264 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, 94 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வில், 775 தனித்தேர்வர்கள், 221 மாற்றத்திறனாளிகளும் உள்ளனர்.நடப்பாண்டு மொத்தம் 21 ஆயிரத்து 39 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தட அலுவலர் ஆகியவர்களுக்கு சி.இ.ஓ., தலைமையில் தேர்வு குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.டி.இ.ஓ., (இடைநிலை) தேர்வு பணியாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். தேர்வு பணிகளில் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட 1,800க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்