காஞ்சிபுரத்தில் 13ல் தமிழக பண்பாட்டு கண்காட்சி துவக்கம்
காஞ்சிபுரம்: தமிழக பெண்கள் செயற்களம், தமிழரண் மாணவர்கள் சார்பில், 15ம் ஆண்டு தமிழக பண்பாட்டு கண்காட்சி, காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளர் சமுதாய கூடத்தில் வரும் 13ம் தேதி துவங்குகிறது.அக்., 13 - 15 வரை, தினமும், காலை 9:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை நடக்கும் இலவச கண்காட்சியில் உலகம் தோன்றியது முதல், ஆங்கிலேயர் காலம் வரையிலான தமிழர் வரலாறு, மறந்துபோன தமிழ் மரபு உணவுகள், மறைந்துபோன தமிழர்களின் 64 கலைகள் இடம் பெறுகின்றன.மேலும், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் இசைக் கருவிகள், சிறுவயதை நினைவூட்டும்தமிழர் விளையாட்டுகள், பழந்தமிழர்களின் நாணயங்கள், மண்பாண்டங்கள், மண் சார்ந்த இயற்கை மூலிகைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெறுகின்றன.மேலும், இலவச சித்த மருத்துவ முகாமும் நடக்கிறது. அனுமதி இலவசம், அனைவரும் கண்காட்சியை பார்வையிடலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.