இடைநின்ற 15,713 பேருக்கு மேற்படிப்பு
சென்னை: நான் முதல்வன், உயர்வுக்கு படி திட்டங்கள் வழியாக 15,713 மாணவர்கள் தாங்கள் விரும்பிய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.அரசு செய்திக் குறிப்பு:கடந்த கல்வியாண்டில், 3.23 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2.40 லட்சம் பேர், உயர் கல்விக்கு விண்ணப்பிக்க, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வசதி செய்யப்பட்டது. மீதமுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் உயர் கல்வி தொடரச் செய்வதற்காக, உயர்வுக்கு படி என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கல்லுாரிக் கனவு கையேடு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக 30,269 மாணவர்கள் திரட்டப்பட்டனர். இவர்களில் 15,713 மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர் கல்வி நிறுவனங்களில் சேர வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.