உள்ளூர் செய்திகள்

நவ., 2 ல் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு

ராமநாதபுரம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறியதாவது: மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு நவ., 2 ல் நடைபெறவுள்ளது. இதில், இம்மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், இக்கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும், பங்கேற்கலாம். விண்ணப்ப படிவங்களை ww.tndge.in என்ற இணையதள முகவரியில் ஆக.,28 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணமாக ரூ. 50 ஐ பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்