பிளஸ் 2 தவறியவர்களுக்கும் பொறியியலில் சேர வாய்ப்பு உண்டு
பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வு மூலம் பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுக்கு, விண்ணப்பிக்க மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தவறியவர்களும் தமிழக அரசு நடத்தும் உடனடி மறு தேர்வு எழுதி வெற்றி பெற்று பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து கவுன்சிலிங்குகளும் முடிவடைந்ததும், இம்மாணவர்களுக்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இவர்களுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும். இம்மாணவர்களும், இதுவரை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களும், சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று, அங்கேயே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இவர்களுக்கு ஒரு வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும்.