பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு
பரமக்குடி: பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை( பிப்.19) இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் துவங்கவுள்ளது. பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 5 ல் துவங்கவுள்ள நிலையில், பரமக்குடியில் இன்றுடன் செய்முறை தேர்வுகள் நிறைவடைகிறது. நாளை காலை தமிழ் முதல் தாள், மதியம் தமிழ் 2 ம் தாள், பிப்., 20ல், காலை ஆங்கிலம் முதல் தாள், மதியம் 2 ம் தாள் நடக்கிறது. மற்ற தேர்வுகள் அனைத்தும் மதியம் 2 மணி முதல் 5.15 மணி வரை நடக்கிறது. அதன்படி, பிப்., 23 ல், கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வும் 24 ல், இயற்பியல், பொருளியல், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கையியல், இ.எம்.ஏ., ஜி.எம்., வேளாண் செய்முறைகள் கருத்தியல், மின்னணு சாதனங்கள் பிரிவு, பிப்., 26ல், உயிரியல், தாவரவியல், வரலாறு, தட்டச்சு, பிப்., 27 ல், கம்ப்யூட்டர் அறிவியல், செவிலியர் தேர்வுகளும் நடக்கவுள்ளது. இந்தாண்டு முதன் முறையாக தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு கோடிட்ட தாள்கள் வழங்கப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக திருப்புதல் தேர்வில் இதே நடைமுறை பின்பற்றப்படவுள்ளது. மேலும் மாணவர்களுக்கான, கல்வித்துறை அறிவுரைப்படி கலர் பென்சில், பேனா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.