பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு; மாணவர்களுக்கு பயிற்சி
திருப்பூர்: ராஜேந்திரன் கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்சாரல் முற்றம் சார்பில், பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கான இலவச பயிற்சி, திருப்பூரில் நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, 22ல் சிறப்பு துணை தேர்வு துவங்குகிறது. இத்தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, தமிழ் பாட இலவச பயிற்சி மற்றும், 10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வுக்கான தமிழ் பாடத்துக்கு இலவச பயிற்சி, தினமும் மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில், மாலை, 3:00 முதல், 6:00 மணி வரை, பயிற்சி அளிக்கப்படும். தமிழாசிரியர் கண்ணன், குமரேசன் பயிற்சி தருகின்றனர். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், 99446 31841, 85088 11791 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, விவரம் அறியலாம் என, தலைவர் மோகன்தாஸ், தமிழ் சாரல் முற்றம் ஆலோசகர் தமிழாசிரியர் கண்ணன் கூறினர்.