உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 சான்றிதழ் வினியோகம்; சென்னையில் மட்டும் அலட்சியம்

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மாணவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டன.பெரும்பாலான மாவட்டங்களில், நேற்று பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால், சென்னை மாவட்டத்தில் மட்டும், மாலை வரையிலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, அரசு பள்ளிகளை தொடர்பு கொண்ட மாணவர்களிடம், எங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகங்களில் இருந்து, எந்த அறிவிப்பும் வரவில்லை என, பதில் கூறினர். இந்நிலையில், சில தனியார் பள்ளிகள் தரப்பில், கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, கேட்டபோது தான், ஆமாம், தேர்வுத்துறையில் இருந்து சான்றிதழ்கள் வந்துள்ளன. உங்கள் பள்ளி பிரதிநிதியை அனுப்பி வாங்கிச் செல்லுங்கள் என, சாவகாசமாகபதிலளித்துள்ளனர்.இந்த விவகாரம் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழுக்கான முக்கியத்துவத்தை கூட உணராமல், தலைநகரான சென்னையில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள், அலட்சியமாக நடந்திருப்பது, பெற்றோரையும், பள்ளி நிர்வாகிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்