பிளஸ் 2 இயற்பியல் தேர்வு கேள்வியில் குழப்பம்
பிளஸ் 2 இயற்பியல் பொது தேர்வில் பகுதி 3ல், ஐந்து மதிப்பெண்களுக்கான கேள்விகளில் 62வது கேள்வி "ரேடானின் தத்துவம் யாது? அதன் பயன்பாடுகள் யாவை?" என்றும் ஆங்கிலத்தில் "ஸ்டேட் பிரின்ஸ்பல் ஆப் ரேடார். வாட் ஆர் தி அப்ளிகேசன்ஸ் ஆப் ரேடார்" என கேட்கப்பட்டுள்ளது. இக்கேள்வியால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து இயற்பியல் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: "ரேடான்" என்பது தனிமத்தை குறிக்கும். "ரேடார்" என்றால் கருவியை குறிக்கிறது. இதில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விதான் சரி. அதன்படி பதில் எழுதினால் தான் 5 மதிப்பெண் கிடைக்கும். ஆனால், தமிழ் வழிக்கல்வி மாணவர்கள் பலர் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளதை பார்த்திருப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. இதனால், 5 மதிப்பெண் குறைந்து "கட் ஆப்" மதிப்பெண் பாதிக்கும் என, மாணவர்கள் அச்சப்படுகின்றனர், என்றார்.