பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை துவக்கம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை தொடங்குகிறது. சட்டசபை தேர்தலுக்காக விடைத்தாள் திருத்தும் மையங்களை ஒப்படைக்க வேண்டியுள்ளது. இதனால் பணியை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.மாவட்டத்தில் கோபி அமலா பள்ளி, ஈரோடு கிறிஸ்து ஜோதி பள்ளி, ஈரோடு கார்மல் பள்ளிகளில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. மையங்களில் வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்களுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.