உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கீர்த்திமான் பள்ளி சாதனை

கோவை: கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.கடந்த 24 ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 160 மாணவர்கள் எழுதிய நிலையில், 93 பேர், 600க்கு 500 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.பள்ளி அளவில் லீபிகா என்ற மாணவி 595 மதிப்பெண்களுடன் முதல் ரேங்க் பெற்றுள்ளார். அர்ச்சனா என்ற மாணவி 594 மதிப்பெண்களும், ரகுராம் என்ற மாணவர் 586 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 25 மாணவர்கள், பாடவாரியாக முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் கோகுல்கிருஷ்ணன், முதல்வர் ஜெபசெல்வின், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கண்ணக்குமார் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்