உள்ளூர் செய்திகள்

நடுநிலைப்பள்ளிகளுக்கு 2 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் வழங்க முடிவு

தூத்துக்குடி:  ‘கல்வி தரத்தை மேம்படுத்த தமிழகத்திலுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு 2 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படவுள்ளதாக’ மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி பிரையண்ட் நகர் டி.டி.டி.ஏ., பள்ளியில் கிராம கல்விக்குழு நாள் நிகழ்ச்சி நடந்தது. அதில் தேவராஜ் பேசியதாவது: செயல்வழி கல்வி முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் மாணவர்களுக்கு படிப்பு சுமையில்லாமல், மகிழ்ச்சியாக மாறியுள்ளது. கசப்பாக இருந்த படிப்பு இனிப்பாகவுள்ளது. அதிகநேரம் பாடம் நடத்தவேண்டியுள்ளதால் ஆசிரியர்கள் மட்டும் அம்முறையை எதிர்க்கின்றனர். இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் அப்பணியிடம் நிரப்பப்படவில்லை. கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழகத்திலுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு 2 ஆயிரம் கம்ப்யூட்டர்கள், ‘டிவி’, வீடியோ பிளேயர் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்