உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 வகுப்புகள் மீண்டும் துவக்கம்

தமிழகத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஓராண்டாக பள்ளி, கல்லுாரிகளில், நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒரு மாதம் மட்டுமே நேரடி வகுப்புகள் நடந்தன. மீண்டும் கொரோனா பரவல் காரணமாக, நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2வுக்கு மட்டும், ஜன., 19 முதல் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு இம்மாதம், 1ம் தேதி முதல், தேர்தல் விடுமுறை விடப்பட்டது. நேற்று தேர்தல் முடிந்த நிலையில், இன்று பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. &'நாளை முதல், மீண்டும் நேரடி வகுப்புகள் துவங்கும்&' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்