பிளஸ் 2 தேர்வு; 268 பேர் ’ஆப்சென்ட்’
மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 தேர்வுகளில் 268 பேர் ஆப்சென்ட் ஆகினர். உயிரியல் தேர்வை 13454 பேரும், தாவரவியலை 2227, வரலாறை 5041, வணிக கணிதத்தை 1671 மாணவர்களும் எழுதினர். தேர்வு மையங்களை இணை இயக்குனர் சசிகலா, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பார்வையிட்டனர்.டாப் சீட்டில் மாற்றம்: கடந்தாண்டு உயிரியல் தேர்வில் உயிர் தாவரவியல் மற்றும் உயிர் விலங்கியல் பகுதிக்கு தனித்தனியாக விடைத்தாளில் டாப் சீட்கள் வழங்கப்பட்டன. இந்தாண்டு இரு பிரிவுகளுக்கும் ஒரே டாப் சீட் வழங்கப்பட்டன.