உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 610 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரித்துள்ளன: அமைச்சர்

சென்னை: தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளில், 610 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரித்துள்ளன. சுகாதாரத்துறைக்கு, அரசு முக்கியத்தும் அளித்து வருகிறது என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். சென்னை, ராமச்சந்திரா பல்கலையின் 20வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 295 பேருக்கு, பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், 69 பேர் தங்க பதக்கம் பெற்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழக அரசு கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சுகாதாரத் துறைக்கு 7,004 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில், 610 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உயர்ந்துள்ளன. முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தால், ஏழை, எளிய மக்களும், உயர் அறுவைச் சிகிச்சை வசதிகளை பெற்று வருகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்