உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கூடம் 2.0 திட்டம்: ஜூலை 1ல் கோவையில் துவக்கம்

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதமாக கடந்தாண்டு பள்ளிக்கூடம் என்ற திட்டம் துவங்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று கலந்துரையாடி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கடந்தாண்டில் 225 போக்சோ வழக்குகள் பதியப்பட்டன. இந்தாண்டு 84 வழக்குகள் இதுவரை பதியப்பட்டுள்ளன. குழந்தைகள், பெற்றோர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.அதன் காரணமாக இந்தாண்டு ஜுலை 1 முதல் பள்ளிக்கூடம் 2.0 திட்டம் துவங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 1,318 பள்ளிகளிலும் இந்த திட்டம் அமல் செய்யப்படும். இந்தாண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படையான தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அரசு பள்ளி பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் டே வித் போலீஸ் என்ற திட்டம் இந்தாண்டும் தொடரும். இத்துடன் ஜுலை 15 முதல் போதை விழிப்புணர்வுக்காக மிஷன் டிரக் ப்ரீ கோவை என்ற திட்டம் பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்