உள்ளூர் செய்திகள்

ஜூன் 20ல் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு; 17ல் தர வரிசை

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது. இவற்றை வெளியிட்டு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 26 ஆயிரத்து, 17 விண்ணப்பங்கள் வந்தன; 25 ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான, ரேண்டம் எண் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை, www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.மாநில ஒதுக்கீட்டிற்கு, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 2,253 இடங்கள்; ஆறு சுயநிதி கல்லுாரிகளில் இருந்து, 470; இரண்டு இ.எஸ்.ஐ., கல்லுாரிகளில் இருந்தும், 130 இடங்கள் என, 2,853 இடங்கள் உள்ளன. விண்ணப்பித்தோருக்கான தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியிடப்படும். முதற்கட்ட கலந்தாய்வு, 20ம் தேதி துவங்கும். பலர் ஒரே, கட் - ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் தாவரவியல், விலங்கியல், வேதியியல் பாட மதிப்பெண்கள்; பின், நான்காவது விருப்ப பாட மதிப்பெண்; பிறந்த தேதி பார்க்கப்படும். அதிலும், ஒரே நிலை இருந்தால் பயன்படுத்த, சம வாய்ப்பு எண் எனப்படும், &'ரேண்டம்&' எண் தரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்