ஜூலை 21 முதல் மடீட்சியா இன்ட் எக்ஸ்போ கண்காட்சி
மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி வளாகம் ஐடா ஸ்கட்டரில் மடீட்சியா இன்ட் எக்ஸ்போ தொழில் கண்காட்சி ஜூலை 21 முதல் 24 வரை நடக்கிறது.தலைவர் சம்பத், செயலாளர் லட்சுமிநாராயணன், பொருளாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர்கள் கோடீஸ்வரன், அசோக், கண்காட்சி தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:இக்கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் அச்சு, மோல்டிங், சி.என்.சி., ரப்பர் பொருட்கள் தயாரிப்பு இயந்திரங்கள் இடம் பெறுகின்றன. கண்காட்சியை காலை 10:15 மணிக்கு அரசு சிறு, குறுந்தொழில் நிறுவன செயலர் அருண்ராய் துவக்கி வைக்கிறார். கலெக்டர் சங்கீதா பங்கேற்கிறார்.கண்காட்சி தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். பொறியியல் கல்லுாரி மாணவர்கள் மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம் என்றனர்.