23 லட்சம் பேருக்கு இலவச கல்வி
இந்த ஆண்டில் அசாமின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 95 ஆயிரம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு 11ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புதன்கிழமை தெரிவித்தார்.'பிரக்யான் பாரதி திட்டத்தின்' ஒரு பகுதியாக, கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் இலவச சேர்க்கை வழங்குவதற்காக 349 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு 68.44 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ரூ.2 லட்சமாக இருந்த இலவச மாணவர் சேர்க்கைக்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு, இந்த ஆண்டு முதல் ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, கடந்த கல்வியாண்டு வரை ரூ.826.36 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. அதன் வாயிலாக, மொத்தம் 22,30,257 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.