உள்ளூர் செய்திகள்

வரும் 23ல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் 23ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்தி அறிக்கை:காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நடக்கும் முகாமில், தனியார் நிறுவன அதிகாரிகள் நேர்காணல் நடத்த உள்ளனர். இதில், 18 - 35 வயது வரையிலான, பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள் கல்வி சான்றிதழ்கள், புகைப்படத்துடன் பங்கு பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்