உள்ளூர் செய்திகள்

ஏப்ரல் 25க்குள் ஆந்திர மாநில பிளஸ் 2 ரிசல்ட்

இந்தியாவிலேயே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை முன்னதாக தரும் ஆந்திர மாநில கல்வியகம், இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12வது வகுப்பு பொதுத் தேர்வுகள் போல, ஆந்திர மாநிலத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் பொதுத் தேர்வாகும். இதில், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 18லும், பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு ஏப்ரல் 22ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்