செஞ்சியில் 28ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், செஞ்சியில் வரும் 28ம் தேதி நடக்கிறது.கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் இணைந்து நடத்தும் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.முகாமில், தகவல் தொழில் நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் வேலை அளிக்கும் நிறுவனங்கள், காலி பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இதற்காக, 8ம் வகுப்பு, 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உடையவர்களும் முகாமில் பங்கேற்கலாம்.முகாமில் பங்கேற்க விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.