உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் 4 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி

காரைக்கால்: காரைக்காலில் கல்வித் துறை சார்பில் 4 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார். காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில், 4 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் துவங்கியது. கண்காட்சியில், ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பிரிவுகளின் கீழ் காரைக்கால், புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியங்களிலிருந்து 62க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கணிதம், மாசுபாடு, புவி வெப்பமயமாதல், காடுகள், இயற்கை வளம் அழிப்பு, அறிவியல் உள்ளிட்ட பல தலைப்புகளின் கீழ் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர். புதிய ஆசிரியர்கள் நியமிக்காதது ஏன்? அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், "புதுச்சேரி அரசு கல்விக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறைக்கு தேவையான நிதியை முதல்வர் ரங்கசாமி வழங்கி வருகிறார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. நீதிமன்ற தடை காரணமாக புதிதாக ஆசிரியர்கள் நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பணியாற்ற வேண்டும்" என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்