உள்ளூர் செய்திகள்

குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களை வேலைக்கு சேர்ப்பதில் தாமதம்

சென்னை: குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்னும் பணி நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பதாக, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில், காலியாக உள்ள, 10,178 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., வழியாக, கடந்த ஆண்டு ஜூலை, 24ம் தேதி போட்டி தேர்வு நடத்தப்பட்டது.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டில் பணி நியமன கவுன்சிலிங் நடந்தது. தரவரிசை அடிப்படையில், தேர்வர்களுக்கு விருப்பமான பணியிடம் மற்றும் துறை ஒதுக்கீடு வழங்கப்பட்டது.அதற்கான உத்தரவு பெற்றவர்களில், பள்ளி கல்வித்துறை, ஹிந்து அறநிலையத்துறை உள்பட சில அரசு துறைகளில் மட்டும், பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை தவிர, பல துறைகளில் பணியில் சேர்வதற்கு, கவுன்சிலிங் மற்றும் பணி ஆணைகள் இன்னும் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது.இதனால், தேர்வில் தேர்ச்சி பெற்று, அதற்கான உத்தரவை பெற்ற பின்னும், வேலைக்கு சேர முடியாமல், தேர்வர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஒரே நேரத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வேலைக்கு சேர்ப்பதில் தாமதமாவதால், பணி வரன்முறை, பதவி உயர்வு போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் என, தேர்வர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்