உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., சேர்க்கை நிறுத்தம்

சென்னை: 'தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லுாரிகளில், ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எஸ்.சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை, வரும் கல்வியாண்டில் இருந்து நிறுத்தப்படுகிறது' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தெரிவித்துள்ளது.இது குறித்து, பல்கலை பதிவாளர் ராஜசேகரன், அனைத்து கல்லுாரி முதல்வர்கள், தாளாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தேசிய ஆசிரியர் கல்வி குழுமம், திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எஸ்.சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்டப்படிப்புகள், 2026 - 27ம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுகிறது.எந்த ஒரு கல்வி நிறுவனமும், புதிதாக மாணவர்களை சேர்க்க அனுமதி கிடையாது. எனவே, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையுடன், இணைப்பு அங்கீகாரம் பெற்ற, கல்வியியல் கல்லுாரிகளில், வரும் கல்வியாண்டு முதல், நான்காண்டு பி.எஸ்.சி., பி.எட்., மற்றும் பி.ஏ., பி.எட்., பட்டப்படிப்பு சேர்க்கை செய்ய வழிவகை இல்லை. விதிகளை மீறி, மாணவர் சேர்க்கை நடத்தினால், பல்கலை எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்