உள்ளூர் செய்திகள்

முஸ்லிம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீடு கோரி தீர்மானம்

சேலம்: ‘கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 6 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நடந்த த.மு.மு.க., மாநாட்டில், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அளிக்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை, 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். தனி இட ஒதுக்கீடு வழங்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்