உள்ளூர் செய்திகள்

புதிதாக 6 செவிலியர் கல்லுாரி: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், அரசு செவிலியர் மாணவ, மாணவியர் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, 1,100 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். நிகழ்ச்சி முடிந்து அவர் அளித்த பேட்டி:கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள் 719 பேருக்கு, வரும் 13ம் தேதி, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில், தற்போது செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் வைத்து, திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலுார், ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில், புதிதாக கல்லுாரி அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்