பிளஸ்1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூலை 2025-ல் நடைபெற்ற பிளஸ் 1 துணைத் தேர்வின் முடிவுகள் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்தால், தேர்வுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தங்கள் மதிப்பீடுகளை மீண்டும் பரிசீலிக்க விரும்பும் மாணவர்கள், விடைதான் நகல் பெற ஆக.,4ம் தேதி காலை 11.00 மணி முதல் ஆக.,5ம் தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். விடைதான் நகலுக்கான கட்டணம் ரூ. 275/-, அதை மாணவர்கள் தங்கள் மாவட்டக் கல்வித் அலுவலகங்களில் நேரில் செலுத்த வேண்டும்.