10ம் வகுப்பு தேர்வு; முறைகேட்டை தடுக்க பறக்கும் படை அமைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை (15ம் தேதி) துவங்குகிறது. 14,971 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை (15ம் தேதி) துவங்கி, ஏப்., 11ம் தேதி வரை நடக்கிறது. காலை 9.15 முதல் மதியம் 12.00 மணி வரை நடக்கும் தேர் வில், வினாத் தாள்களை காலை 9.15 மணி முதல் 9.25 வரை படிக்கவும், மாணவர்களின் விவரங்களை காலை 9.25 முதல் 9.30 வரை சரி பார்க்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு, 37 மையங்களில் நடக்கிறது. 239 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 7389 மாணவர்கள், 7582 மாணவியர், தனித்தேர்வர்களாக 1317 மாணவர்கள் தேர்வு எழுதுன்றனர். 820 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். அறை கண்காணிப்பாளர்கள் மொபைல் போன்பயன்படுத்த தடை விதிக்கப்பட் டுள்ளது. தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க அனைத்து மையங்களிலும் நிலையான பறக்கும் படை செயல்பட உள்ளது. முதன்மைக் கல்வி அதிகாரியின் மேற்பார்வையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில், 59 பள்ளிகளைச் சேர்ந்த 1458 மாணவர்கள், 1581 மாணவியர், 13 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக 455 மாணவர்கள் எழுதுகின்றனர். 172 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தவிர்க்க முதன்மை கல்வி அதிகாரி மேற்பார்வையில் 4 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.