உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வு; நாஹர் பப்ளிக் பள்ளி சாதனை

விழுப்புரம்: விழுப்புரம் நாஹர் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவி தீபிகா 488 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், மாணவிகள் ஜனகவல்லி, ஹரிதா இருவரும் தலா 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் பிடித்துள்ளனர். 450 மதிப்பெண்ணுக்கு மேல் 10 மாணவர்கள், 400 மதிப்பெண்ணுக்கு மேல் 32 மாணவர்கள் பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர் அரசப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்