உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு

திருத்தணி: மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடந்தது.இதில் தோல்வியடைந்த மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு, திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் நடந்தது. ஆர்.கே.பேட்டை அய்யன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பள்ளிப்பட்டு சாய்ஸ்ரீ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று மொழித்தாள் - தமிழ், தெலுங்கு பாடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் 386 மாணவர்கள் தேர்வு எழுதினர். 52 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்