10ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கல்
திருக்கனுார்: சோரப்பட்டுஅரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கி,பத்தாம் வகுப்பு பயிலும் 55 மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட்ட கற்றல் கையேட்டினை வழங்கினார்.கற்றல் கையேட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். ஆசிரியர்கள் விஜேஷ், ஏஞ்சல் மேரி, சடகோபன் சூரியகுமாரி, மாணிக்கவேல், அருள் பிரசாத் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.