10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து, 152 பேர் மாணவர்கள்; 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மாணவியர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. சென்னையில், 222 மையங்களில் நடக்கும் தேர்வில், 58 ஆயிரத்து, 436 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில், 29 ஆயிரத்து, 101 பேர், மாணவர்; 29 ஆயிரத்து, 335 பேர், மாணவியர். தேர்வு நடக்கும் தேதிகள் விவரம்: 27.3.13 - தமிழ் முதற்தாள்28.3.13 - தமிழ் இரண்டாம் தாள்1.4.13 - ஆங்கிலம் முதற்தாள்2.4.13 - ஆங்கிலம் இரண்டாம் தாள்5.4.13 - கணிதம்8.4.13 - அறிவியல்12.4.13 - சமூக அறிவியல்