உள்ளூர் செய்திகள்

ரூ.1,000 கோடியில் தொல்குடி திட்டம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில், திருமணம், விளையாட்டு கூடம், கற்றல் மற்றும் பயிற்சி மைய வசதிகள் உள்ள, 120 சமூகக் கூடங்கள், 100 கோடி ரூபாயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.*சென்னை, தஞ்சை, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில், கல்லுாரி மாணவியர் விடுதியும், மதுரையில் கல்லுாரி மாணவர் விடுதியும், 75 கோடி ரூபாயில் கட்டப்படும்*பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு, அடுத்த நான்கு ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், &'தொல்குடி&' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்*பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர, திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, 5 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்*வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி பெறுவதற்கும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட்டும்*பள்ளிவாசல், தர்காக்களை சீரமைக்க, 10 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, தென்காசி மாவட்டம் பொட்டல்புதுாரில் உள்ள தர்காக்கள் இந்த ஆண்டு சீரமைக்கப்படும்*சர்ச்களை சீரைமைக்க, 10 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். சென்னையில் சூளை, கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம், சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் சர்ச்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்*தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்கள் இல்லம் சார்ந்த சிகிச்சைகள் வழங்கப்படும்*புற உலகச் சிந்தனையற்ற மன இறுக்கம் உடையோருக்கு தொடுதிறன், செயல்முறை, பேச்சு, சிறப்புக் கல்வி என, அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், சென்னையில், 25 கோடி ரூபாயில் உயர் திறன் மையம் அமைக்கப்படும்.நகர்ப்புற பசுமை திட்டம்*அம்ருத் திட்டத்தில், உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ., சாலைகள், 2,500 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்*வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆகியவற்றை துாய்மையாக பராமரித்தல், கரையோரம் பசுமை மரங்களுடன் கூடிய பூங்காக்கள், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்டவற்றிற்கு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, கோவை நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ஆய்வு பணிகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது*மாநகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க, நகர்ப்புற பசுமை திட்டம் துவங்கப்பட்டுள்ளது*மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளில், 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வினியோகம் விரிவுபடுத்தப்படும்*தனியார் பங்களிப்பு முறையில், கோவை, திருச்சி மாநகராட்சிகளில், கழிப்பறைகள் பராமரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்*ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள், 7,890 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயனடைவர்*பெரம்பலுார் நகராட்சி; நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமப்பட்டி, கபிலர்மலை மற்றும் பரமத்தி ஆகிய நான்கு ஒன்றியங்கள்; திண்டுக்கல் மாநகராட்சி சின்னாளப்பட்டி, சேவுகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் துவக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்